சீர்காழி அருகே உடல் எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிய மீனவரால் பரபரப்பு

சீர்காழி அருகே உடல் எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிய மீனவரால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சீர்காழி அருகே உடல் எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிய மீனவரால் பரபரப்பு
X

சீர்காழி அருகே மீனவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள ஷெட்டில் இன்று காலை ஆண் ஒருவர் எரிந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சீர்காழி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூக்கில் எரிந்த நிலையில் சடலமாக தொங்கியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் , அவர் பூம்புகாரை சேர்ந்த ரவி மகன் குணா (30) என்பது தெரியவந்தது.

மீனவரான இவர் திருமுல்லைவாசல் பகுதியில் எரிந்த நிலையில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குணா கொலை செய்யப்பட்டு தீவைத்து கொளுத்தி பின்னர் தூக்கில் தொங்க விடப்பட்டாரா? அப்படி என்றால் கொலை செய்து தப்பிய நபர்கள் யார்? என்பது குறித்து சீர்காழி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 13 Oct 2021 10:50 AM GMT

Related News