/* */

வீடு தீயில் எரிந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி

மயிலாடுதுறை அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

HIGHLIGHTS

வீடு தீயில் எரிந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி
X

மயிலாடுதுறை அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி சாத்தனூரை அடுத்து வள்ளுவக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த ராசு மகன் ராஜகோபால் என்பவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து முழுவதும் எரிந்து வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சேதமடைந்தது.

தகவலறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோன்று தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவை, மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். செம்பனார்கோவில் சைன் லைன் சங்க சார்பில் ஷைன் லயன் முனைவர் சாம்ராட் கே.பாலையா 5 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இதில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், செம்பனார் கோவில் வட்டார அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் அம்சா, மேமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தக்ஷிணாமூர்த்தி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கர், லயன் விஷ்ணு மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க. பொறுப்பாளர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்