மயிலாடுதுறை:2 ஒன்றியங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மயிலாடுதுறை:2 ஒன்றியங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தலைமையில் மனு தாக்கல் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் 15-வது வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் தத்தங்குடி 15-வது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளராக ரமேஷ் ராக்கெட், காட்டுச்சேரி 30 -வது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டனர்.

தி.மு.க வேட்பாளர்களான இவர்கள் இருவரும் இன்று நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் தலைமையில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன்,பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், அப்துல்மாலிக், அன்பழகன், ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2021 1:32 PM GMT

Related News