/* */

மயிலாடு துறை தருமபுரம் ஆதீனம் ,சரஸ்வதி பூஜை- விஜயதசமி தின வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

மயிலாடு துறை தருமபுரம் ஆதீனம் ,சரஸ்வதி பூஜை- விஜயதசமி தின வாழ்த்து
X

தருமபுரம் ஆதீனம் இருபத்தி ஏழாவது குரு மகா சன்னிதானம்.

மயிலாடுதுறையில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விஜயதசமி வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறப்பட்டு இருப்பதாவது:- அம்பாள் 9 நாள்கள் விரமிருந்து அரசுனை வதம் செய்த நாள் விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விஜயன் (அர்ச்சுனன்) உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள் வன்னி மரத்தின் பொந்தினில் வைத்த தங்களது ஆயுதங்களை மீட்டெடுத்ததனர். இதன் காரணமாகவே நம்மிடம் உள்ள ஆயுதங்களை எல்லாம் பூஜையில் வைத்து பூஜிக்கின்றோம். இன்றைய தினம் கலைமகளுக்கும் உகந்த தினம் என்பதால் மூல நட்சத்திரத்திலே ஆவாகனம் செய்து மூன்றாம் நாள் சரஸ்வதி பூஜையன்று சிறு குழந்தைகளுக்கெல்லாம் ஹரி அமோர்த்த சித்தம் என்று அவர்களுக்கு சொல்லித் தருகின்ற நாள்.

இன்றைய தினம் நூல்களை வைத்து பூஜை நடத்துவதோடு, அவற்றை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து நூல்களை படிப்போருக்கு எல்லா ஞானங்களும் கிடைக்கும். எனவே என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய நூலறிவு நமக்கு முக்கியமானது. திருமடங்களில் உள்ள பழைமையான ஓலைச் சுவடிகளில் சரஸ்வதி, துர்க்கை, இலக்குமி ஆகிய மூவரையும் மூன்று திருவுருவங்களாக வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இந்நாளில் உழவர்கள் ஏர்க்கலப்பை, மரக்கால், படி, தராசு ஆகியவற்றை வைத்து பூஜை செய்வதால் ஆயுத பூஜை என்று கொண்டாடுகின்றோம். கல்வி கற்பதற்குரிய நூல்கள். எழுதுகோல்கள்களை வைத்து பூஜிப்பதால் சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுகின்றோம். கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாகவும், கலைகளின் தொடக்க நாளாகவும் அமைந்துள்ள இந்த நாள். பாரத நாட்டில் தொடங்கிய இந்த விழாவை உலகெங்கும் கொண்டாடுபவர்களுக்கு ஆசீர்வாதங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 14 Oct 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!