/* */

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்து தொங்குவதால் பக்தர்கள் அச்சம்

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்

HIGHLIGHTS

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்து தொங்குவதால் பக்தர்கள் அச்சம்
X

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அச்சம்

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அச்சம். உடனடியாக அதனை சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இந்துசமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இத்தளத்தில் உள்ள சுவாமியை சூரியன், சந்திரன், சனி பகவான் மற்றும் நலன் மகாராஜா ஆகியோர் வணங்கி தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்றுள்ளனர். இத்தலம் சனிபகவானின் சாப, தோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. இங்கு சனீஸ்வர பகவான் நின்ற கோலத்தில், கைகூப்பியபடி, அமிர்த கலசத்தை கையில் ஏந்தியவாறு பொங்கு சனீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சியளித்து சனி ப்ரீத்தி மற்றும் பரிகார தெய்வமாக விளங்குகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லாததால் கொடிமரம் இல்லாமல் இருந்துள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மார்ச் ஆறாம் தேதி கோவிலுக்கு பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்பணி பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கோவிலில் உள்ள செப்புக் கவசமிட்ட கொடி மரத்தின் நடு பாகம் கடந்த ஆண்டு சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்யாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொடி மரத்திற்கு சாரம் அமைத்து கொடிமரம் கீழே சாயாதவாறு நிலை நிறுத்தியுள்ளனர்.

கொடிமரம் சேதமடைந்தது மக்களுக்கு ஆகாது என்பதால் உடனடியாக சேதமடைந்த கொடிமரத்தை சீர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொடிமரத்தின் மேல் உள்ள கொடி சேதமடைந்து உடைந்து தொங்கியுள்ளது. இதனைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கொடிமரத்தை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவன் கோவில் கொடிமரம் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  2. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  4. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  5. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  6. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  9. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  10. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு