/* */

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்   ஆய்வு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் 504 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 9,81,082. இதில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நபர்கள் 761,320 பேர் உள்ளனர். இதுவரை 3,53,432 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 504 இடங்களில் இன்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை தாலுகாவில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலம்ப பயிற்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் சீர்காழியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு முழுமையாக தடுப்பூசி செலுத்திய 15 ஊராட்சிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கொரோனா தடுப்பூசி கட்டாயமா? கட்டாயம் இல்லையா என்ற கேள்விக்கு உயிரோடு இருப்பது அவசியமா அவசியம் இல்லையா என்ற கேள்வியை போன்றது. நாம் இருக்கின்ற இந்த இக்கட்டான காலத்தை சமாளிக்க கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வது மட்டும்தான் ஒரே தீர்வு . தடுப்பூசி போடுங்கள் என அரசு கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை என்றார் அமைச்சர்.

இதையடுத்து, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், முதலமைச்சர் ஆணைக்கிணங்க சீர்காழி அரசு மருத்துவமனையில் புதிதாக ஸ்கேன் மையத்தை தொடங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதாமுருகன், எம் பன்னீர்செல்வம் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 26 Sep 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா