/* */

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

HIGHLIGHTS

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு
X

இன்று முழு ஊரடங்கால் மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த 6-ஆம் தேதி முதல் தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்து நடைமுறைபடுத்தி வருகிறது.

அந்த வகையில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழுஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் ஒருசிலர் மட்டும் சுற்றி திரிகின்றனர். ஒருசில தரைகடை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தொற்றால் சராசரியாக 150 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது போலீசாரும், வருவாய்துறையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Updated On: 23 Jan 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்