/* */

மயிலாடுதுறையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

மயிலாடுதுறையில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை  தொடக்கம்
X

மயிலாடுதுறை கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தின் கீழ் வரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ஒரு கோடியே 25 லட்சம் மற்றும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூபாய் 60 லட்சம் இந்த ஆண்டு விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மின் பட்டுப்புடவைகள், காஞ்சிபுரம் ,ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், பல்வேறு பகுதிகளில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், பருத்தி சட்டைகள் தலையணை உறைகள்,நைட்டீஸ் உள்ளிட்ட ஏராளமான ஏற்றுமதி ரகங்கள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகபட்சமாக 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லலிதா அப்போது பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Updated On: 13 Oct 2021 3:48 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?