மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
X

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜீ -பிரியா தம்பதியினர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் பிரியா நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ராஜீ காலையில் வழக்கம்போல் தனது வீட்டினை பூட்டிவிட்டு மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். பின்னர் பணிகளை முடித்துவிட்டு மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பீரோவில் வளையல் மற்றும் செயின் , ஆரம் உள்ளிட்ட ஐந்தரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ராஜீ அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 May 2022 3:30 PM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Acebrophylline and Acetylcysteine Tablets Uses In Tamil ...
 2. தமிழ்நாடு
  பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி...
 3. நாமக்கல்
  நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...
 4. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
 5. விழுப்புரம்
  புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
 6. காஞ்சிபுரம்
  தேர்வு அறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து தலையில் காயம்
 7. டாக்டர் சார்
  வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்
 8. திருக்கோயிலூர்
  திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
 9. தமிழ்நாடு
  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்...
 10. திருவில்லிபுத்தூர்
  திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து