/* */

சீர்காழியில் 2 பேர் மீது தாக்குதல்- போலீஸ்காரர் கைது

சீர்காழியில் முன்விரேதாதம் காரணமாக 2 பேரை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

சீர்காழியில் 2 பேர் மீது தாக்குதல்- போலீஸ்காரர் கைது
X

சீர்காழியில் போலீஸ்காரர் தாக்கியதில் காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் வயது.35. இவர் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஆக பணியாற்றி வருகிறார். தனசேகரன் உறவினர்களுக்கும் அதே பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் நகரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் பிரதீப்.20. என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது

இதுதொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர், தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அமிர்தராஜ்.35. என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவலர் தனசேகரன் விரைந்து வந்து பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் அவர் வைத்திருந்த லத்தியால் தாக்கியதில் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து தனசேகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பிரதீப் அமிர்தராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து காவலரை தரக்குறைவாக பேசி தாக்க செல்லும்பொழுது காவலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் வைத்திருந்த லத்தியால் அவர்களை அடிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Updated On: 17 Sep 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்