/* */

மார்ச் 13: பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்த "திருநெல்வேலி எழுச்சி"

சுதந்திர, சுயராஜ்ஜிய முழக்க எதிரொலியாக நடந்த இந்த சம்பவத்தை ஆங்கிலேய அரசு `திருநெல்வேலி கிளர்ச்சி' என்றே வரலாற்றில் பதிவு செய்தது.

HIGHLIGHTS

மார்ச் 13: பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்த திருநெல்வேலி எழுச்சி
X



நாடு முழுவதும் சுதேசி உணர்வை ஊட்டியதற்காக விபின் சந்திரபால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலையான 1908, மார்ச் 8-ம் தேதி சுயராஜ்ய நாளாக சுதந்திரப் போராட்ட வீரர்களால் கொண்டாடப்பட்டது. அதற்காக மார்ச் 9-ம் தேதி தாமிரபரணி ஆற்றின் கரையிலிருந்த தைப்பூச மண்டபத்தின் மீதேறி வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் பேசினார்கள். அந்த உரையை 12,000க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கேட்டனர்.ஆங்கிலேய அரசின் தடையை மீறிப் பேசியதற்காக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் மூவரும் மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனால் மக்கள் கொந்தளித்தனர், மார்ச் 13-ம் தேதி நெல்லையில் மக்களின் கிளர்ச்சியால் ஆங்கில அரசுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. மாணவர்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் சாதி, சமய பேதங்களை மறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டன் நாடாளுமன்றம் வரை இந்த கிளர்ச்சி எதிரொலித்தது.கடுமையான அடக்குமுறையால் இந்தக் கலவரம் அடக்கப்பட்டது, என்றாலும் மறக்க முடியாத இந்த தினத்தை ஆங்கிலேய அரசு `திருநெல்வேலி கிளர்ச்சி' என வரலாற்றில் பதிவு செய்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.தா.இந்து கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மீதும் ஆங்கிலேய அரசின் போலீஸார் தடியடி நடத்தினார்கள். அதனால் கொந்தளித்த போராட்டக்காரர்கள், நகராட்சி அலுவலகத்தைத் தீவைத்துக் கொளுத்தினார்கள். பெட்ரோல் பங்க், காவல் நிலையம் ஆகியவற்றையும் சூறையாடினார்கள்.கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஆங்கிலேய அரசு, துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரையும் கைதுசெய்த ஆங்கிலேய அரசு, அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்தது. சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி., பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அதிகபட்சமாக 40 வருட சிறைத் தண்டனை பெற்றார்.

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில், சுயராஜ்ய நாள் விழா கொண்டாடியதற்காக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டம் திருநெல்வேலி எழுச்சி தினமாகக் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

Updated On: 13 March 2022 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...