/* */

பொதுப்பயன்பாட்டிற்கான மின்கட்டணம் விர்ர்ர்.. மக்களுக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்

Tamil Nadu EB Bill Revised Rate -அடுக்குமாடி குடியிருப்புகள், தனிப்பட்ட வீடுகளில் பொது சேவை மின் இணைப்பிற்கான கட்டண விகிதத்தை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

பொதுப்பயன்பாட்டிற்கான மின்கட்டணம் விர்ர்ர்.. மக்களுக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்
X

Tamil Nadu EB Bill Revised Rate -தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, புதிய கருவிகள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியத்தின் கடன் அளவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரத்து 647 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வருவாயை ஈட்ட மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ந் தேதி மின்சார வாரியம் மனுக்களை சமர்ப்பித்தது.

இதனையடுத்து மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் மின் கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கை மக்களை பாதிக்கும் என்று அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்பதுடன் கடந்த 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பது தொடரும். 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதி கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு விவரம்

புதிய மின் கட்டணத்தின்படி 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் தற்போது ரூ.1,130-ல் இருந்து ரூ.1,725-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 500 முதல் 600 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் ரூ,1,786-ல் இருந்து ரூ.1,958 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

புதிய மின் இணைப்பு

புதிதாக மின் இணைப்பு வழங்கும்போது செலுத்தப்படும் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஒரு முனை இணைப்பு கேட்பவர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும், மின்மீட்டர் கட்டணம் ரூ.600-லிருந்து ரூ.750, மின்நுகர்வு கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.300 ஆகவும், மேம்படுத்தப்பட்ட கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 ஆகவும், மின் இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கான பழைய கட்டணம் ரூ.2 ஆயிரத்து 800 கட்டணத்திற்கு பதிலாக புதிய கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 50 கட்ட வேண்டும்.

இதேபோல் மும்முனை மின் இணைப்பு கட்டணம் ரூ.9 ஆயிரத்து 950-ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோன்று வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்பு கோருபவர்களுக்கு ஒரு முனை இணைப்புக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 400-லிருந்து ரூ.9 ஆயிரத்து 250 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புக்கான கட்டணம் ரூ.15 ஆயிரத்து 950-லிருந்து ரூ.27 ஆயிரத்து 300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அடுக்குமாடி வீடுகளில், மோட்டார் பம்ப், லிப்ட் போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பயன்பாட்டிற்கு, புதிய விகிதத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை பார்த்து, நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுப்பயன்பாட்டுக்கு யூனிட் ரூ.8

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனி குடியிருப்புகளில் ஒரு வீட்டை தவிர மற்ற வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தாலோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலோ அதற்கான ஒப்பந்த ஆவணத்தை காண்பிக்க வேண்டும். இல்லையென்றால், பொது பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8 வசூலிக்கப்படும்

அடுக்குமாடி குடியிருப்புகளில், நடைபாதை விளக்கு, 'லிப்ட், மோட்டார் பம்ப்' போன்றவற்றை உள்ளடக்கிய, பொது சேவைகளுக்கும் வீட்டு பிரிவிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல தனிப்பட்ட வீடுகளிலும் மோட்டார் பம்ப், வாயில் விளக்கு போன்றவற்றிற்கு பொது சேவை பிரிவில் மின் இணைப்பு பெற்றுள்ளனர். அந்த இணைப்புக்கு வீட்டு பிரிவில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரை மானிய விலை கட்டண சலுகைகள் கிடைத்தன.

ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, வீடுகளில் பொது சேவை பயன்பாட்டிற்கு, புதிய கட்டண விகிதம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விகிதத்தில் 1 யூனிட் மின் கட்டணம் 8 ரூபாயும், மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த கட்டணம் விகிதம் மாற்றும் பணிக்கு, 2023 ஏப்ரல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய பிரிவு அலுவலக ஊழியர்கள் தங்கள் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனிப்பட்ட வீடுகளுக்கு சென்று, பொது சேவை மின் இணைப்பிற்கான கட்டண விகிதத்தை மாற்றி வருகின்றனர். தற்போது, அந்த கட்டணத்தை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மின் நுகர்வோர்கள் கூறியதாவது: இருபது வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பொது சேவை பிரிவில் இதுவரை 400 யூனிட்டிற்கு 1,000 ரூபாய்க்கு கீழ் மின் கட்டணம் வந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டணத்தின்படி அதே யூனிட்களுக்கு 3,600 ரூபாய் கட்டணம் வந்துள்ளது.

இந்த கட்டணத்தை மொத்த வீட்டு உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்வவார்கள் என்றாலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக அதிகளவில் கட்டண சுமை ஏற்படுகிறது.

எனவே, பொது சேவை பிரிவுக்கு யூனிட்டிற்கு 8 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பாதியாக குறைக்க, மின் வாரியமும், ஒழுங்குமுறை ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...