மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 51 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
X

வாலிபரை மிரட்டி வழிப்பறி செய்த இரண்டு பேர் கைது

மதுரை, சக்கிமங்கலம் சந்திரலேகா நகர் பால்ராஜ் மகன் சரவணன் 22.இவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே டிபன் சென்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ600 ஐ வழிப்பறி செய்து விட்டனர்.இந்த சம்பவம் குறித்து சரவணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட கரிமேடு பொன்னகரம் நான்காவது தெரு பாண்டியராஜன் மகன் மனோஜ் சிவா என்ற மனோஜ் 22, தத்தனேரி களத்து போட்டல் கண்ணன் மகன் கிருஷ்ணகுமார் 26 ஆகிய இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து மரணம்

மதுரை, வண்டியூர் சி எம் நகர் யமுனா நதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 75. இவர் சௌராஷ்ட்ராபுரம் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலமாக அடிபட்டு மயங்கினார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயர்ந்தார். இது குறித்து அவருடைய மனைவி வில்லம்மாள் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் சுப்பிரமணியனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் லாட்டரி விற்பனை ஒருவர் கைது ரூ.4 ஆயிரம் பறிமுதல்

மதுரை, கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்றுஅங்கு ரகசியமாக கண்காணித்தார். அப்போது ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த செல்லூர் மீனாட்சிபுரம் ஜீவா நகர் காமராஜ் 57 என்பவரை கைது செய்தார் .அவரிடம் இருந்து செல்போன் ஒன்றையும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூ.4169ஐயும் பறிமுதல் செய்தார்.

சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உட்பட மூன்று வாலிபர்கள் கைது.

மதுரை, அவனியாபுரம் பெரியசாமி நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 49 .இவர் விளக்குத்தூண் பகுதியில் உமருப்புலவர் பள்ளி அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவரை மூன்று வாலிபர்கள் வழிமறித்து அவரை தாக்கினர்.பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் பறித்த ஆசாமிகளை தேடி வந்தனர் .அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது செல்போன்பறித்த வாலிபர்களை அடையாளம் தெரிந்தது .பின்னர் 17வயது சிறுவனையும், காளவாசல் தமிழ் தென்றல் மூன்றாவது தெரு மோகன் மகன் விமல் 19, அரசரடி சின்ன கண்ணன் மகன் அஜய் பாண்டி 19 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

வாலிபரை தாக்கி செயின் பறிப்பு நான்கு பேர் கைது.

மதுரை, திருமங்கலம் தென்காள்பட்டி தென்காள் நகரை சேர்ந்தவர் லட்சம் மகன் நிஷாந்தன் 25 .இவர் புட்டுத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவரிடம் சிலர் வாயைத் தகராறில் ஈடுபட்டனர்.இதை நிஷாந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு வாலிபர்கள் நிஷாந்தனை ஆபாசமாக பேசி தாக்கினர் .பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் சங்கிலியையும் பறித்துச் சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து நிஷாந்தன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கி செயின் பறித்த மேலமாசி வீதி மக்கனார் தோப்பு சந்திரன் மகன் முத்துவேல் 27, வெங்கடசாமிநாயுடு அக்ரஹாரம் சரவணன் மகன் ஆகாஷ்20, சிம்மக்கல் தைக்கால் முதல் தெரு மணிகண்டன் மகன் ஸ்ரீ ராம் 22, நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் அப்துல் ஜாபர் மகன் முகமது அசாருதீன் 20 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் .அவர்கள் பறித்துச் சென்ற ஒன்னேகால் பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.

மதுரை நகரில் 187 மது பாட்டில்கள் பறிமுதல் 31 பேர் கைது.

மதுரை நகரில் ஜெய்ஹிந்த்புரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ் எஸ் காலனி, உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் அதன் உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அந்தந்தப்பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டிலகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 36 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் 80 கிலோ பறிமுதல்: 9 பேர் கைது

மதுரை நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர். அப்போது தெப்பக்குளம் பகுதி மாரியம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி 45 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் . மேலும் தெப்பக்குளம் கீரைத்துரை, சுப்பிரமணியபுரம்,உட்பட பல்வேறு காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பதுக்கிவைத்து விறபனைசெய்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 26 May 2023 11:00 AM GMT

Related News