/* */

உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

கல்லூயின் கணிதத் துறையின் சார்பாக இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது

HIGHLIGHTS

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில்கணிதத் துறையின் சார்பாக இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கிற்கு, கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். தலைவர் பாலகிருஷ்ணன் பொருளாளர் வனராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் சுபாஷ் வரவேற்றார். முதல்வர் ரவி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.

முதல் நாள் அமர்வில் சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் பாஸ்கர் பாபுஜி, துருக்கி உளுடாக்பல்கலைக்கழகப் பேராசிரியர் இஸ்மாயில் நாசி கான்குல், கேரளா பல்கலைகழகப் பேராசிரியர் சுரேசிங், காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் மகாதேவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இரண்டாம் நாள் அமர்வில் ஓமன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவஞானம், வேலூர் வி.ஐ.டி பேராசிரியர் ஜெகதீஷ்குமார், பஞ்சாப் பாட்டியாலா பல்கலைக்கழகப் பேராசிரியர் சத்ய பீர் சிங், நார்வே ஓஷ்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் தேவராஜ் நாராயணப்பா ஆகியோர் கருத்துரையாற்றினார். பல்வேறு பல்கலைக்கழக கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கட்டுரையை சமர்பித்து பேசினர். தேனி மார்க்கெட் கமிட்டி இளநிலை கண்காணிப்பாளர் ஆனந்த கார்த்திகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளர் பொன்ராம், பேராசிரியர்கள் சூரியராஜன், சுந்தரராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் மார்கரட் காருன்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கணித துறை பேராசிரியர்கள் ரேணுகா தேவி, சிவசங்கரி, ரமேஷ்பாண்டி, ராஜாகலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியர் சூர்யா நாக பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

Updated On: 11 Oct 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்