/* */

பணி நீக்கம் செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலை. தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேர் சுட்டெரிக்கும் வெயிலில் 72 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கினர்

HIGHLIGHTS

பணி நீக்கம் செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலை.  தொழிலாளர்கள் போராட்டம்
X

மதுரை காமராஜர் பல்கலை. யில்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிநீக்கம் செய்யப்பட்ட 136பேர் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொகுப்பூதிய பணியாளர்கள்136பேர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 136 பேர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது சம்பந்தமாக பல்வேறு முறை தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே தற்போது பல்கலைக்கழக வாயில் முன்பாக கொளுத்தும் வெயிலில் நிழற்குடை இல்லாமல் தொடர் 72 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போலீஸ் தரப்பில் அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருப்பதாகக்கூறி நிழற்குடைக்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர்.

136 பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் ஏற்கெனவே இறந்து விட்டார். எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சாமியானா பந்தல் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காவல்துறை அனுமதி மறுத்து சாமியானா பந்தல் மற்றும் கொண்டு வந்த உபகரணங்களை வேனில் ஏற்றி அனுப்பி வைத்தது. அங்கிருந்தவர்களின் கல்நெஞ்சை கரைய வைக்கும் விதமாக இருந்தது.

Updated On: 20 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்