மதுரை அருகே பைக் மீது லாரி மோதி இளைஞர் பலி

பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை அருகே பைக் மீது லாரி மோதி இளைஞர் பலி
X

பைல் படம்

சென்னையில் இருந்து மதுரைக்கு பைக்கில் சென்ற வாலிபர் கண்டெய்னர் லாரி மோதி உயிரிழந்தார்.

சென்னை குளத்தூர் மகரிஷி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் 23. இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரைக்கு சென்னையில் இருந்து பைக் ஓட்டி வந்து கொண்டிருந்தார். திருமங்கலத்திலிருந்து சோழவந்தான் ரோடு திண்டுக்கல் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் ஈஸ்வரன் பலியானார்.இந்த விபத்து குறித்து மாணவனின் தாய் மாரியம்மாள் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்டைனர் லாரி டிரைவர் வண்டியூர் சௌராஷ்ட்ராபுரத்தைச் சேர்ந்த டிரைவர் ராமநாதன்(49) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லூரில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் அம்பேத்கர் காலனி முதலாவது தெருவை சேர்ந்தவர் சுப்பையா( 70)இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி மாரியம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் சுப்பையாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் உக்கட்புரியை சேர்ந்தவர் தன் மனைவியுடன் சுற்றுலா பயணியாக மதுரைக்கு வந்தார். அவர் விமானத்தின் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவர் பயனிகளின் உடமைகளை சோதனை செய்யும் இடத்தில் நின்ற போது திடீரென்று மயங்கி விழுந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது .அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி விதாபாய்தத்தாரியேகைக்கர்(62 )அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரைக்கு தேர்வு எழுத வந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், புளியங்குடியை சேர்ந்தவர் முனியசாமி மகன் வைத்தீஸ்வரன்( 26.) இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவ நாளன்று அந்த பெண் மதுரையில் நடந்த தேர்வு ஒன்றை எழுதுவதற்காக வந்திருந்தார். தேர்வு எழுதி முடிந்த பிறகு நேரம் அதிகமானால் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிரமப்பட்டார்.

இதனால் காதலன் வைத்தீஸ்வரன் இரவு நேர பயணத்தை தவிர்க்க கூறி தனது நண்பர் வீட்டில் தங்கும்படி கேட்டுக்கொண்டார் .இவரது பேச்சை நம்பிய அந்த இளம் பெண் வைத்தீஸ்வரனின் நண்பர் கோவிந்தராஜ் என்பவரின் உலக நேரியில் உள்ள வீட்டில் தங்கவைத்தார்.

நள்ளிரவில் அங்கு சென்ற காதலன் வைத்தீஸ்வரன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதைத்தொடர்ந்து காதலனும் அவரது குடும்பத்தினரும் அவரது நண்பரும் அந்தப்பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்தப்பெண் தல்லாகுளம் அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்தார். போலீசார், காதலன் வைத்தீஸ்வரன், அவருடைய அம்மா லதா, சகோதரி சித்ராதேவி, நண்பர் கோவிந்தராஜ் இவர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து காதலன் வைத்தீஸ்வரனை கைது செய்தனர்.


முன்விரோதத்தில் வாலிபரை தாக்கி செல்போனை உடைத்த இரண்டு பேர் கைது .

மதுரை கீரைத்துரை லாடப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் துரைமுருகன்(26.). இருவருக்கும் அண்ணாநகர் எல்ஐசி காலனியை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் அரவிந்தகுமார்(20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் அரவிந்த்குமாரும் குமாரும் அவருடைய நண்பர் அவனியாபுரம் எம்எம்சி காலனி கண்ணன் மகன் பிரவீன்(23 ) இருவரும் ஆபாசமாக பேசி தாக்கி துரைமுருகன் வைத்திருந்த செல்போனையும் பறித்து உடைத்தனர். இந்த சம்பவம் குறித்து துரைமுருகன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தாக்கிய அரவிந்த் குமார், பிரவீன் இருவரையும் கைது செய்தனர்.


Updated On: 29 Jan 2023 3:15 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாகுபலியானார் எடப்பாடி பழனிசாமி: கோவை அ.தி.மு.க.வினர் வைத்த கட்அவுட்
 2. சினிமா
  எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்
 3. தமிழ்நாடு
  சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இருந்து பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகள்...
 5. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 6. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 7. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 8. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 9. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
 10. லைஃப்ஸ்டைல்
  வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்