/* */

திருமங்கலம் நகராட்சி 5 மற்றும் 6வது வார்டு திமுக வேட்பாளர்கள் பிரசாரம்.

திருமங்கலம் நகராட்சி 5 வது வார்டு திமுக வேட்பாளர் ரம்யாமுத்துகுமார் 6 வது வார்டு வேட்பாளர் திருக்குமார் பிரசாரம்

HIGHLIGHTS

திருமங்கலம் நகராட்சி 5 மற்றும் 6வது வார்டு திமுக வேட்பாளர்கள்  பிரசாரம்.
X

வாக்கு கேட்டு சென்ற பொழுது 5வது வார்டு, 6வது வார்டு பொதுமக்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தும், மாலை மரியாதை செய்து வரவேற்பளித்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 6வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ம். ரம்யா முத்துக்குமார் மற்றும், 5 வது வார்டில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.திருக்குமார் சேர்ந்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது வாக்கு கேட்டு சென்ற பொழுது 5வது வார்டு, 6வது வார்டு பொதுமக்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தும், மாலை மரியாதை செய்து வரவேற்பளித்தனர்.

எம்.. ரம்யா முத்துக்குமார் மற்றும் ஆர்.திருக்குமார் பொதுமக்களின் காலில் விழுந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, இ -சேவை மையம், தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து திட்டங்களையும் பெற்றுத் தருவதாகவும், குறைதீர்ப்பு மையம் அமைப்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை 5வது, 6வது வார்டு உட்பட்ட பொதுமக்களிடம் கூறி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் ஆர். முத்துக்குமார், ஆதிதிராவிட நல அமைப்பு பொட்டு தங்கபாண்டி, அழகர், அஜய் கண்ணன், திமுக இளைஞர் அணியினர் ,மற்றும் திமுக மகளிர் அணியினர், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

Updated On: 15 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்