சோழவந்தான் காமராஜர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

மாணவர்களின் சிந்தனை வளம் பெற சிறு வித்தாக இது விளங்குவதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சோழவந்தான் காமராஜர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்
X

சோழவந்தான் காமராசர் பள்ளியில்  நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.

சோழவந்தான் காமராஜர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஆர்வமுடன் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 2022_23 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் பென்சாம், முதல்வர் கலைவாணி, உறவின்முறைத் தலைவர் சிவபாலன் செய்து இருந்தனர்.

மாணவ, மாணவியர், தொழில்துறை, விவசாயம், தமிழ் ஆளுமை, பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், விண்வெளி துறை உள்ளிட்ட பல்வேறு கலை அறிவியல் பொருள்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். ஆர்வமுடன் கேட்ட பெற்றோர்களுக்கு, மாணவ மாணவிகள் அதனை விளக்கிக் கூறினர். இந்த கண்காட்சியில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் , உறவின்முறை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடத்துவதன் நோக்கம்... ஓர் மீள் பார்வை..

அறிவியல் கண்காட்சி, காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து, கருத்துச் செறிவூட்டி சிந்திக்கவும் கனவு காணவும் செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். இது படைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் உடல், உள்ளம், ஆன்மா, சமூகம் சார்ந்த அனைத்துத் திறன்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் முக்கிய காரணி எனக் கூறலாம்.

அறிவியல் கருத்துகளையும் தத்துவங்களையும் கொள்கைகளையும், பொது விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பல்வேறு கருவிகளையும், சோதனைகளையும், அமைப்பு மாதிரிகளையும் நேரடியாகக் கண்டு பயன்பெறவும், ஒலி-ஒளிக் காட்சிகள் மற்றும் நேரடியான சிறப்பு சொற்பொழிவுகள் வாயிலாக புதிய கருத்துகளைப் பெறவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி அறிவியல் கற்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கான ஒரு தூண்டுகோலாகும்.

இது, அறிவு மற்றும் செயல் திறன்களை வெளிப்படுத்தி புதியன படைக்கவும் ஆழ்மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. மேலும் மாணவர்களின் சிந்தனை வளம் பெறுக சிறுவித்தாக இது விளங்குவதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.கண்காட்சிப் படைப்புகளை பெற்றோர்களும் சமுதாயமும் காண்பதால் மாணவர்களின் திறன்களை பாராட்ட நல் வாய்ப்புகள் அமைகின்றன. இதனால் மாணவர்களின் உயர் கல்விக்கான சூழ்நிலைகள் மேம்படுகின்றன.

அறிவியல் கண்காட்சியின் நோக்கங்கள்: வகுப்பறையில் கற்ற கருத்துகளைப் பயன்படுத்தி புதிய கருவிகள், சோதனைகள், அமைப்பு மாதிரிகள், அரிய உண்மைப் பொருள்கள் போன்றவைகளை படைக்க ஊக்கமளித்தல்.உடன் பயிலும் மாணவர்களின் சாதனைகளைக் கண்டுணர்ந்து, புதிய செயல் திட்டத்தில் ஈடுபடும் எண்ணத்தைத் தூண்டுதல்.செயல் திறன்களை மேம்பாடு அடையச் செய்தல்.அறிவுத் திறன் மிக்க மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர ஊக்கப்படுத்துதல்.

இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிந்து பாராட்டுதல்.ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்தல். பள்ளிகளுக் கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல் அறிவியல் கண்காட்சி அமைக்கும் முறைபொதுவாக அறிவியல் கண்காட்சியானது, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, மண்டலம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது.

Updated On: 18 March 2023 9:00 AM GMT

Related News

Latest News

 1. வேலைவாய்ப்பு
  ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
 2. சோழவந்தான்
  ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
 3. திருப்பரங்குன்றம்
  மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
 4. தேனி
  தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
 5. பவானிசாகர்
  ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
 6. இந்தியா
  36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
 7. சினிமா
  கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
 8. குமாரபாளையம்
  கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்
 9. இந்தியா
  மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் ஆதார் அட்டை: மத்திய அரசு
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்...