/* */

கோயில் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு

விழாவிற்கு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்

HIGHLIGHTS

கோயில் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு
X

சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருந்தளித்து விருது வழங்கப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. விழாவிற்கு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்

பல லட்சம் பக்தர்கள் கூடிய இந்த திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் விதமாக விருந்தும் விருதும் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமை வகித்தார்.மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள் கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார் தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ சைவ விருந்து வழங்கப்பட்டது.


Updated On: 17 May 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  9. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!