மதுரை அருகே ரத்தக் காயங்களுடன் திரியும் மயில்கள்: மக்கள் அச்சம்

மதுரை அருகே ரத்தக் காயங்களுடன் மயில்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை அருகே ரத்தக் காயங்களுடன் திரியும் மயில்கள்: மக்கள் அச்சம்
X

உடலில் காயங்களுடன் மயில்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கரடிக்கல், உரப்பனுர் போன்ற சுற்றுவட்டாரக் கிராமப் பகுதியில் வழக்கம்போல் மயில்கள் உலா வந்து கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக இரத்தக் காயங்களுடனும், ரோமங்கள் உதிர்ந்த நிலையிலும் பல மயில்கள் இப்பகுதியில் சுற்றித் திரிந்ததில் சில மயில்கள் திடீரென இறந்ததால் நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டுள்ளனவா என இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது, திருமங்கலம் அருகில் உள்ள கரடிக்கல் பகுதியில் உள்ள ஊராண்ட உரப்பனூர் கிராமத்தில் ஊரணிக்கரை அருகில் காலில் அடிபட்ட மயில் ஒன்றும் உடலில் இரத்தத் காயங்களுடனும் மற்றொரு மயிலும் உடற்சோர்வுற்று தனக்கான உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் மயங்கி கிடந்தன. இதையறிந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததனர்.

இதையடுத்து மேற்கண்ட சம்பவ இடம் எந்த வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் வரும் என குழம்பிய வனத்துறையினர் நீண்ட நேரத்திற்கு பின் உசிலம்பட்டி வனச்சரகம் என அடையாளம் கண்டனர். பின்னர் உசிலம்பட்டி வனச்சரக வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம்பட்ட மயில்களை மீட்டு சென்றனர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், வன உயிரினங்களை பாதுகாக்க தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி மையத்தை தரம் உயர்த்தக்கோரியும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் போன்ற சுற்றுவட்டாரப்பகுதிகளை உள்ளடக்கிய வனச்சரகம் ஒன்றை புதிதாக அமைக்க தமிழக அரசும், வனத்துறையும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 10:56 AM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
 2. மதுரை மாநகர்
  பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
 3. மயிலாடுதுறை
  சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 4. பரமக்குடி
  பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன்...
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பள்ளி விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா பங்கேற்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:
 7. மேலூர்
  மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
 8. மேலூர்
  மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு