பெண்ணிற்கு கத்தி குத்து உள்ளிட்ட மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள்

பெண்ணிற்கு கத்தி குத்து உள்ளிட்ட மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பெண்ணிற்கு கத்தி குத்து உள்ளிட்ட மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள்
X

கோவிலில் விளக்கேற்றிய தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் சேலையில் தீ பற்றி பெண் பக்தை பலியானார்.

மதுரை சூர்யாநகர் மீனாட்சியம்மன் நகர் அல்லி மலர் தெருவை சேர்ந்தவர் காசிஅம்மாள் (வயது 67.) சம்பத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இவர் கோயிலில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே போட்டு விட்டார் .இதில் தீ முற்றிலும் அணையாத நிலையில் தீக்குச்சியில் இருந்த நெருப்பு காசி அம்மாளின் சேலையில் கைப்பற்றியது.

இதில் பற்றி எரிந்த தீயில் அவர் உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் ராஜமாணிக்கம் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்பக்தை காசி அம்மாளின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிற்கு கத்தி குத்து

மதுரை மதிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமயில் (வயது51.) இவரது சகோதரர்கள் சாத்தமங்கலம் கார்மேகம் மகன் அழகர்சாமி , ஹரிதாஸ், முத்துப்பாண்டி ஆவார்கள். இவர்களுக்கும் பூமயிலுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் பூமயில் வீட்டிற்கு சென்ற சகோதரர்கள் மூவரும் பூமயிலை ஆபாசமாக பேசினர். அவரை அழகர்சாமி கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் குறித்து பூமயில் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் முத்துப்பாண்டி, ஹரிதாஸ், அழகர்சாமி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்தனர். முத்துப் பாண்டியையும், ஹரிதாசையும் தேடி வருகின்றனர்.

3 பேர் கைது

மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் ஏழாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துப்பாண்டி (வயது 26.) இவருக்கும் திருப்பரங்குன்றம் தேவி நகரை சேர்ந்த சுந்தர் மகன் அசோக் குமாருக்கும்( 31 ) இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டியை அசோக் குமாரும் திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த காசி மகன் பிரேம்குமார் (26,) அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், நிதீஷ்குமார் (24 )ஆகிய மூவரும் வழிமறித்து ஆபாசமாக பேசினர். முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார், அசோக் குமார், பிரேம் குமார், நிதீஷ்குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த மோதல் குறித்து அசோக் குமார் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியையும் கைது செய்தனர்.

Updated On: 18 Sep 2023 10:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் கலகோட் பகுதியில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவள்ளூர்
    கர்நாடக அரசை கண்டித்து ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு...
  4. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவள்ளூர்
    சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து நாயுடு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!
  6. நாமக்கல்
    ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரம் நடும்...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா..!
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நகரை தூய்மைப்படுத்த பேட்டரி வாகனங்கள்
  9. திருவண்ணாமலை
    காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
  10. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம்