கொரோனவால் பாதித்து இறந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு அமைச்சர்கள் நிவாரண உதவி

கொரோனாவால் இறந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனவால் பாதித்து இறந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு அமைச்சர்கள் நிவாரண உதவி
X

மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் நலத்திட்ட உகவிகள் வழங்கி அமைச்சர்கள் பி. மூர்த்தி, பபழனிவேல்தியாகராஜன்

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின்19 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 59 இலட்சத்திற்கான காசோலையினை, அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்:

மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின் 19 குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 59 இலட்சத்திற்கான காசோலையினை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி,மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தாய், தந்தை இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும் வைப்புத்தொகையாக வழங்கிடவும், பாதுகாப்பாளர்களுக்கு குழந்தைகளை வளர்க்க மாதந்தோறும்.ரூ. 3000 மட்டும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தாய், தந்தை இருவரையும் இழந்து பாதுகாப்பாளர்கள் இல்லாமல் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பாதுகாப்பாக குழந்தைகள் இல்லத்தில் அனுமதித்து, இலவச கல்வி, உணவு மற்றும் உடை ஆகியவற்றை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 குழந்தைகளுக்கு .ரூமூன்று இலட்சம் மட்டும் , தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த 1 குழந்தைக்கு ரூ. ஐந்து இலட்சம் மட்டும்)-மும் ஆக மொத்தம்19 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 59 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) திரு.மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில் குமாரி மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கணேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

 1. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 2. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 3. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
 4. கூடலூர்
  நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
 5. சென்னை
  சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
 6. குளித்தலை
  மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
 7. அந்தியூர்
  ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 8. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 9. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 10. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...