/* */

முன் விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்தி குத்து: 2 பேர் கைது

மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்ப வங்களில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

முன் விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்தி குத்து: 2 பேர் கைது
X

பெத்தானியாபுரத்தில் முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து : இரண்டு பேர் கைது

மதுரை, பெத்தானியாபுரம் திலீபன் தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் தினேஷ் பாண்டி 29. இவருக்கும், கோச்சடை காளியம்மன் கோவில் தெரு பழனிசாமி மகன் விஜய் 23-க்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில், பைபாஸ் ரோடு பெத்தானியாபுரம் வழியாக சென்று கொண்டிருந்த தினேஷ் பாண்டியை, விஜய்யும், மகபூப்பாளையம் இரண்டாவது தெரு முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் சரவணன் 21. இருவரும் வழிமறித்து, ஆபாசமாக பேசி தாக்கினர். கத்தியாலும் குத்தி உள்ளனர் .இந்த சம்பவம் குறித்து ,தினேஷ் பாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார், வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கி, கத்தியால் குத்திய விஜய் 23. சரண் 21. இருவரையும் கைது செய்தனர்.

காதல் தோல்வியால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை, ஆத்திகுளம் கனகவேல் காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் ஹரிஷ் ராஜ் 21.இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்களது காதல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்த ஹரிஷ் ராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து ,அவருடைய சகோதரி ரோகிணி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாலிபர் ஹரீஷ்ராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரியிடம் திருட்டு பைக் விற்பனை: இரண்டு வாலிபர்கள் கைது

மதுரை, வாழைத்தோப்பு சிந்தாமணி ரோட்டை சேர்ந்தவர் பாண்டி மகன் மணிகண்டன் 32 .இவர், திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, இவரது கடைக்கு பைக் கொண்டு வந்த இரண்டு வாலிபர்கள் அதை அவரிடம் விற்பனைசெய்துள்ளனர். அதற்காக ரூஒரு லட்சத்து 15 ஆயிரத்தை பெற்றுக் கொண்டனர். அதற்கான உரிய ஆவணங்களையும் கொடுத்துள்ளனர்.பின்னர் பார்த்தபோது அந்த பைக் திருடப்பட்டது என்று ஆவணங்கள் போலியானது என்றும் தெரியவந்தது . இதனால், மணிகண்டன் விற்பனை செய்த நபர்களை தேடிச்சென்று பணத்தைதிருப்பித் தரும்படி கேட்டுள்ளார் .அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.

அவரை மிரட்டியும் உள்ளனர். இது குறித்து, மணிகண்டன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு பைக் விற்பனை செய்த கரும்பாலை பி.டி. காலனி குமார் மகன் முருகேசன் 32, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அங்காடிமங்கலம் சேகர் மகன் ஹரிகிருஷ்ணன் 34 ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பெண்களிடம் எட்டு பவுன் தங்க நகை பறிப்பு

மதுரை, திருப்பரங்குன்றத்தில் இரண்டு பெண்களிடம் வெவ்வேறு சம்பவங்களில் எட்டுபவுன்தங்க நகை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் புஷ்பவல்லி 55.இவர், திருப்பரங்குன்றத்திற்குதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். திருப்பரங்குன்றம் புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே பஸ்ஸிலிருந்து அவர் இறங்கினார். அப்போது, பைக்கில் வந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, திருப்பரங்குன்றம் போலீசில் புஷ்பவள்ளி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் செயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

சந்நிதி தெருவில் செயின்பறிப்பு

நாகமலை புதுக்கோட்டை மேல குயில்டியை சேர்ந்தவர் செல்வம் மனைவி சத்யா 33. இவர் ,சன்னதி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார் .அவர் ஒரு திருமண மண்டபம்அருகே சென்றபோது, இவர் வைத்திருந்த பேக்கை மர்ம நபர் திருடி சென்று விட்டார் .அந்த பேக்கில் இரண்டே முக்கால் பவுன் தங்க நகை வைத்திருந்தார்.இந்த திருட்டு குறித்து, அவர் திருப்பரங் குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, புளியமரம் பஸ் ஸ்டாப்பிலும் சன்னதி தெருவிலும் நகை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கணவருடன் பைக்கில்அமர்ந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு:

மதுரை, கே.புதூரில் கணவருடன் பைக்கில்அமர்ந்து சென்ற பெண்ணிடம் செயின்பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கே .புதூர் டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன் மனைவி தனபாண்டி 37. இவர் முத்தமிழ்நகர் இரண்டாவது தெருவில் கணவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது ,அவரை பின்தொடர்ந்து வந்த பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, தனபாண்டி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாண்டியிடம் செயின் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

உத்தங்குடியில் உடற்பயிற்சியின் போது செல்போன் திருட்டு:இரண்டு வாலிபர்கள் கைது


மதுரை உத்தங்குடி திருவள்ளுவர் தெரு சுப்புராம் மகன் சுந்தர்30. இவர், மேலூர் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி பின்புறமாக நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். இதனால், அவர்கள் கொண்டு சென்ற செல்போன்களை அருகே வைத்து விட்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்

.அப்போது அங்கு வந்த நான்கு வாலிபர்கள் அவர்களின் செல்போனை திருட முயன்றனர். இதை கண்டதும் சுந்தரும் அவருடைய நண்பர்களும் அவர்களை விரட்டி பிடித்தனர்.அவர்களில் இரண்டு பேர் பிடிபட்டனர் .இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர் .பிடிபட்ட நபர்களை போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் அவர்களிடம் விசாரித்த போது பிடிபட்ட நபர்கள் மதுரை, ஜெய்ஹிந்த்புரம், புலி பாண்டியன் தெரு நாகராஜ் மகன் சசிகுமார் 21, ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை பசும்பொன் நகர், செல்வகுமார் மகன் கவி முருகன் 21 என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை செல்லூர் எல்ஐசி பாலத்தில் ஓவர் டேக் செய்தபோது கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் மரணம்

மதுரை, செல்லூர் பாக்கியநாதபுரம் முனியாண்டி கோவில் தெரு தங்கமணி நகர் சுரேஷ் மகன் மனோஜ் குமார் 24. இவர் செல்லூர்எல.ஐ.சி பாலத்தில் பைக் ஓட்டிச் சென்றார். அப்போது கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்த வடிவேல் முருகன் மகன் கிருபாகரன் 33 என்பவரும் கார் ஓட்டிச் சென்றார். அவர் பைக்கை முந்தி செல்ல முயன்ற போது பைக் மீது மோதி பைக் மீண்டும் இ.பி. போஸ்டில் மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ் குமாருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மனோஜ் குமாரின் தந்தை சுரேஷ் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் டிரைவர் கிருபாகரன் மீது வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2023 2:45 PM GMT

Related News