/* */

கோயில் ஆகம விதிகளில் அரசின் தலையீடு கூடாது- முன்னாள் அமைச்சர் உதயகுமார்

கோயில் ஆகம விதிகளில் அரசின் தலையீடு கூடாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

HIGHLIGHTS

கோயில் ஆகம விதிகளில் அரசின் தலையீடு கூடாது- முன்னாள் அமைச்சர் உதயகுமார்
X

தனது மகள் திருமண அழைப்பிதழை சோழவந்தான் பகுதி மக்களிடம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கோயில் ஆகம விதிமுறைகளை மீறினால் தி.மு.க.விற்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

அ.தி.மு.க.வின் ஜெயலலிதா பேரவையின் சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி .உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, திருமண விழா அழைப்பிதழை, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில், ஜனகைநாராயண பெருமாள் கோவில், குருவித்துறையில் உள்ள, சித்திர வல்லபவபெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடத்தில் சட்டமன்ற ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, பேரூர் கழகச் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், கழக 51வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டும்,கழக அம்மா பேரவையின் சார்பில் எனது மகள் திருமணம் உட்பட ,51 திருக்கல்யாணம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது. முன்னாள் முதலமைச்சர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

தேர்தலை மையமாக வைத்து கட்சிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வோ மக்கள் நலனை மையக்கருத்தாக கொண்டு ,ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் மக்களுக்காகஉழைத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில், ஆண்டாண்டு காலமாக வரலாற்று பதிவாக ஆகம விதிகளை கடைபிடிக்கபபட்டு வருகிறது. தற்போது, ஆகம விதிகளை மீறும்போது, மக்கள் மனமும் குமுறும், தெய்வம் மனமும் குமுறும் .

ஆகம விதிமுறை மீறினால் மக்கள் மனம் வருத்தப்படும்,தெய்வங்கள் மனமும் வருத்தப்படும். நம்முடைய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஆகம விதியை மீறினால், அரசுக்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எம்.ஜி.ஆர். அதிக நாட்கள் தி.மு.க.வில் இருந்தார் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். திராவிட கொள்கைகளை மறந்து, ஜனநாயக கொள்கைகளை மறந்து, குடும்ப ஆட்சியை தி.மு.க. நடத்தியது. ஏழை,எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அண்ணாவின் கொள்கைகளை உருவாக்கி, அண்ணாவின் பெயரில் அ.தி.மு.க.வை ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

இருக்கும்பொழுது கருணாநிதியை கோட்டை பக்கம் கூட வர விடாமல் மக்கள் தடுத்தனர். அதையெல்லாம் மறைத்துவிட்டு முதலமைச்சர், தனக்குள்ள அதிகாரத்தை வைத்து தனது சொல்லை வலிமையாக்கி உள்ளார். தி.மு.க.வை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார் என்பது முதலமைச்சருக்கு நன்றாக தெரியும்.

நாணயத்தின் இரு பக்கங்களாக எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் இருக்க வேண்டும். தற்போது, ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க, எதிர்க்கட்சியை எதிர்கொள்வதில் பூஜ்யம் அடைந்துள்ளது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசின் மீது பழி போடுவதும், அவதூறு பரப்புவதிலும் வல்லவர்கள்.

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு, இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திட, மாபெரும் சட்டப் போராட்டம் செய்து, அதன் மூலம் முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்துக் கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பினை ஜெயலலிதா பெற்று தந்தார்.

ஆனால், கேரளா அரசு ரூட் கர்வ் விதிகளை புகுத்தி ,பருவ காலத்தில் நீரை தேக்கவிடாமல் நீரைதிறந்து விட்டு, இன்றைக்கு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறது. முல்லைபெரியாறு என்பது, ஐந்து மாவட்ட மக்கள் ஜீவாதார பிரச்சினையாகும். அணை வலுவாக உள்ளது என்று வல்லுநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு கேரளா அரசு சுயநலத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 1 Dec 2022 7:39 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?