/* */

மதுரையில் தமிழ் அன்னை சிலைக்கு முன்னாள் அமைச்சர் மரியாதை

உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளான 10.1.1981-ல் எம்ஜிஆர் முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மதுரையில் தமிழ் அன்னை சிலைக்கு முன்னாள் அமைச்சர் மரியாதை
X

 வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அணிவித்து மரியாதை செலுத்தினார்

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசும் போது,திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கொண்டாட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்கள்: தமிழ் மொழிக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை.போட்டிக்காக கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடத்தினார்கள் முழுக்க முழுக்க திமுக குடும்பம் தான் அந்த மாநாட்டில் இருந்தது. அந்த மாநாட்டை உலக தமிழ் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக நாங்கள் பல்வேறு வகையில் பாடுபட்டோம் தற்போது முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

திமுகவும் காங்கிரஸ் இயக்கமும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்சநீதிமன்றத்தில் வாதாடியது திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் பா சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான்..வாதாடி நீட் தேர்வை நிரந்தரமாக வருவதற்கு காரணமாக இருந்தவர். கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அதிமுக.

அனிதா என்ற மாணவி இறந்ததற்கு வைகோ, திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காளர்கள் போராட்டம் செய்தார்கள். தற்போது 12 பேர் இந்த திமுக ஆட்சிக் காலத்தில் இறந்துள்ளார்கள்.அவர்களை பற்றி யாராவது பேசுகிறார்களா? வைகோ இது குறித்து பேசுகிறாரா? இந்த திமுக அரசை கண்டித்து யாராவது பேசுகிறார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.நீட் தேர்வில் அன்றைய தினம் வாய்மூடி மௌனமாக இருந்தது திமுக.

நாடாளுமன்றத்தில் 39 பேர் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக பாராளுமன்றத்தை இதுவரை இவர்கள் முடக்கி இருக்கிறார்களா? 48 நாட்கள் காவிரி பிரச்னைக்காக எங்கள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். திமுக இன்று வேஷம் போட்டு நாடகம் ஆடி கொண்டிருக்கிறது. வாரிசு அரசியலை நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கோடி ரூபாய்க்காக தங்களது கொள்கைகளை அடமானம் வைத்திருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள். இனிமேல் உணர்ச்சி வந்து நல்லது செய்ய குரல் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறோம். நாளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இரண்டு சீட்டு மூன்று சீட்டு மற்றும் கோடி ரூபாய்க்காக தங்கள் கொள்கை களை அடமானம் வைத்திருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள். மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டத்திலாவது இனிமேல் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஆர்.பி. உதயகுமார்.

மதுரை தமுக்கம் மைதான நுழைவுவாயிலில் தமிழன்னை தேரில் அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது. அதனை உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளான 10.1.1981-ம் தேதி எம்ஜிஆர் முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். இந்தச் சிலைகள் மதுரைக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தின. சுற்றுலா பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் இவற்றைப் பார்வையிட்டு மகிழ்கின்றனர்.

Updated On: 25 Jan 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  6. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  7. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  10. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...