மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

இனளஞர் உயிரிழந்த ஏரி.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெரியசாமி. இவரது கடைசி மகன் கண்ணன் (வயது 28). இன்று காலை நண்பர்களுடன் கண்மாயில், குளிக்க சென்றிருந்தார். இந்த நிலையில், கண்ணன் நண்பர்களுடன் விளையாடி நீச்சல் அடித்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் வெளியில் வராததால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கண்ணன் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்து மதுரை பொறுப்பு நிலைய அலுவலர் தயாளக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறை குழுவினருடன் இணைந்து 20-க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்களுடன் நீரில் மூழ்கியதாக கூறப்படும் கண்ணனை மூன்று மணி நேரமாக தேடி உடலை மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, மதுரை எஸ் .எஸ். காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 8:16 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...