மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்

மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு காலத்திற்கு பின்னர் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
X

மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து மகிழ்ந்தனர்.

பொதுவாக பெண்களின் நட்பு பள்ளி, கல்லூரிகளுக்குப் பிறகு தொடராத நிலையில் பல பழைய நட்புகளைப் புதுப்பித்துக் கொள்கிற முயற்சி மற்றும் சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்து பலர் தங்களது பழைய நட்புகளை அடையாளம் கண்டு மீண்டும் நட்பை புதுப்பித்து கொள்ளும் நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது .அப்படி ஒரு நிகழ்வு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள பி.கே.என். மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் முப்பெரும் விழாவாக புதுமை படைத்தது மதுரை, திருமங்கலம் பி.கே.என். பள்ளியின் 1997 வருட நட்பு. இவர்கள் தங்களின் 25 வருட வெள்ளி விழா,மறு இணைப்பில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் அனைத்து தோழியருக்கும் ஒரு முன்மாதிரியாகவும், மறு உலகத்தை காட்டும் படியாகவும் செய்ய வேண்டும் என நினைத்தனர்.

அதில் முதலாவதாக, தங்கள் பள்ளியிலேயே 40 வருடங்கள் பணியாற்றி அனைத்து மாணவர்களாலும் பாராட்டப்பட்ட 7-A பிரிவு ஆசிரியர் பிரேமாவை அவரின் 76 வயதில் குழுவாக சென்று சந்தித்து மகிழ்ச்சிப்படுத்தினர். தனது இளமைக்கால நினைவுகள், கவிதைகள், தமிழ், ஒழுக்கம் என பிரேமா ஆசிரியர் பேசப்பேச ஒரு நாள் போதவில்லை. பிரேமா ஆசிரியை தனது மாணவிகளுக்காக உடனடியாக இரு வாழ்த்துக் கவிதைகள் தந்தார். பிரசுரம் செய்யுமளவு அத்தனை கவிதைகள் பிரேமா ஆசிரியையிடம் இருந்தது. கல்கியின் தீவிர வாசகியான பிரேமா ஆசிரியை தன் மகள்களுக்கு சிவகாமி, வானதி, மங்கை, பொன்னி என பெயர்கள் வைத்துள்ளது கூடுதல் சிறப்பு.


இரண்டாவதாக மதுரை, திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில் உள்ள ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையத்தில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சிப்படுத்தினர். வழக்கமான உணவு, தின்பண்டங்கள் வழங்கும் நடைமுறையுடன் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஆசைகள் கேட்டதில் சகுந்தலா பாட்டி தனது உள்ளக் கிடக்கையை பாடலாக பாடி ஆறுதல் பெற்றார்.60, 70 களில் வந்த 'தை பிறந்தால் வழிபிறக்கும்' படத்தின் கவிஞர் நாமக்கல் முத்துச்சாமி எழுதிய, எம்.எஸ்.ராஜேஸ்வரி குரலில் பாடிய பாடலான மண்ணுக்கு மரம் பாரமா பாடலை மனப்பாடமாக முழுவதும் படித்தார் .பாட்டியின் சோகத்தைப் பகிர்ந்ததில் எல்லோரது கண்களும் குளமாகின.


அய்யனார் என்பவர் வேறு எந்த பலகாரமும் வேண்டாம் முறுக்கு தான் வேண்டும் நான் ஆடுகிறேன் என்று கோரிக்கை வைக்க முறுக்கு தந்ததும் அவர் முகத்தில் மகிழ்ச்சி.

சுந்தரி என்ற அக்கா சந்தோஷமாக நான் நடனம் ஆட வேண்டும். அதுவும் விஜய் பாட்டுக்கு என்றார்.விஜய் பாட்டு போட்டதும் மற்றவர்களுடன் அவர் ஆடிய ஆட்டம் கொண்டாட்டம் தான்.

மூன்றாவதாக 37 பெண்களின் மறு இணைப்பு கொண்டாட்டம்.அன்றும், இன்றும் என்ற பேனர், மாணவிகளின் பழைய, புதிய அனுபவங்கள்.... தற்போது அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணிகள் ( வழக்கறிஞர் பணி காவல்துறையில் பணி ,ஆசிரியர்பணி மருத்துவர் பணி, சுயதொழில் என தங்களது தற்போதைய பணிகள் மற்றும் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நடனம், விளையாட்டு பாட்டு என பல போட்டிகள் நடைபெற்றது

மறு இணைப்பு என்பது தங்களுக்கான மகிழ்ச்சியாக மட்டும் இல்லாமல்., தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சிப்படுத்திய மதுரை,திருமங்கலம் பி.கே.என். மகளிர் பள்ளி மாணவிகளின் புதிய முயற்சி ஒரு விதை. தேவையுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதும் ஒரு மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் மூலமாக பல பசுமையான மலரும் நினைவுளுடன் நட்புகளை புதிபித்ததுடன் மீண்டும் எப்போது இது போன்ற சந்திப்பு நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்புடன் சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Updated On: 4 Oct 2022 3:08 PM GMT

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...