/* */

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடம் ஏடகநாதர் சுவாமி.

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவில் 30 ஆம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை சுவாமி மற்றும் அம்பாளை திருக்கோவிலில் இருந்து காலை 10:30 மணிக்கு தெப்பத்திற்கு அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

மாலை சுமார் ஐந்து மணி அளவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு.9 மணி அளவில் ஏழவார் குழலி ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தது. அப்போது ஓம் நமச்சிவாயா என்று பக்தர்கள் மனமுருக பாடி சாமி பின் சென்றனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு அதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழுத் தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 8 Feb 2023 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!