/* */

மதுரை அவனியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

Crime News In Tamil- மதுரை அவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காரில் கடத்தி வந்த இருவர் கைது

HIGHLIGHTS

மதுரை அவனியாபுரத்தில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்
X

மதுரை அவனியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை கடத்தி வந்த கார் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது

Crime News In Tamil- அவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையுடன் இருவர் கைது செய்து அவர்களிடமிருந்த பணம் ரூ 15, ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை அவனியாபுரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை அவனியாபுரம் போலீசாருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது . இதனை யடுத்து, அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது , அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை வழிமறித்து போலீஸார் சோதனையிட்டனர். காரில், தடை செய்யப்பட்ட 124 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் இருந்த இரு நபர்களை பிடித்து விசாரித்ததில் , அவனியாபுரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

மேலும் ,அவர்கள் வைத்திருந்த ரூபாய் 15,000 மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலையும் விற்பதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் ,விசாரணையில் மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகன் ராஜா( 42). மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் பாலமுருகன் ( 36). என்பது தெரியவந்தது. இருவரையும், அவனியாபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 July 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?