/* */

மதுரை அருகே பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது

மதுரை அருகே பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மதுரை அருகே  பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது
X

கைது செய்யப்பட்ட ரகுபதி.

மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை பேராசிரியர் ரகுபதி என்பவரை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை கப்பலூர் பகுதியில் ,செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் தமிழ் துறையில் தொகுப்பூதிய பேராசிரியராக பணியாற்றி வருபவர் பேரையூர் அருகே ஏழுமலை கிராமத்தை சேர்ந்த ரகுபதி.இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

ரகுபதிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில ஆண்டுகளாக போதைக்கு அடிமையான ரகுபதியை, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் ,கடந்த 3 வருடமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் பேராசிரியையுடன் ரகுபதி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் இருந்து வந்த ரகுபதி அவருடன் நெருக்கமாக பழக முயற்சி செய்துள்ளார். அவ்வப்போது பெண் பேராசிரியருக்கு கடந்த மூன்று மாத காலமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும், கூறப்படுகிறது. அடிக்கடி ரகுபதி அளித்த பாலியல் தொந்தரவு காரணமாக பேராசிரியை ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பேராசிரியை கொடுத்த புகாரின் பேரில் ,ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுபதியை நேற்று இரவு கைது செய்திருந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் வகுப்பறை நேரங்களில் கூட குடித்துவிட்டு மது போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் ஆஸ்டின் பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 May 2023 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு