/* */

மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீஸார்

கோவை மாநகரில், காரிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வாகனங்கள் தீவிர சோதனை நடைபெறுகிறது

HIGHLIGHTS

மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீஸார்
X

மதுரை விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸார்

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினத்தை முன்னிடு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.

கோவை மாநகரில், காரிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வாகனங்கள் தீவிர சோதனை நடைபெறுகிறது. மதுரை விமான நிலையத்தில், பண்டிகை தினமான தீபாவளி திருநாளையொட்டி, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்து.

பண்டிகை தினத்தையொட்டி, கூடுதல் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய உள்வளாகம். ஓடு பாதை மற்றும் சுற்றுப்பாதை, அதிவிரைவு அதிரடிப்படை, ஆகியவை மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவினர் 3 பிரிவுகளாகவும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் போலீஸார் விமான நிலைய வெளி வளாகம், டோல்கேட். வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த நிகழ்வை தொடர்ந்து, போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் தீவிர வாகன பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தீபாவளியை முன்னிட்டு, மதுரை நகரில் பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீபாவளியையொட்டி, மதுரை விளக்குத் தூண், மேலமாசி வீதி, சிம்மத்தில், வடக்கு மாசி வீதி பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், சட்டம் - ஒழுங்கு நிலை எப்படி உள்ளது என்பது குறித்த விவரங்களை அனுப்புமாறு, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சி அமைத்து உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

பத்து ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்ததால், தி.மு.க.வினர் தங்கள் ஆட்டத்தை தொடங்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதற்கேற்ப, கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை என, ஏராளமான புகார்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்த வண்ணம் உள்ளன.புகாரில் சிக்கியோருக்கு, ஆளுங்கட்சி முக்கிய பிரமுர்களின் ஆதரவு உள்ளதால், பல வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய, போலீசார் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து, ஆங்காங்கே குட்டி தலைவர்களும் உருவாகி விட்டனர். இதனால், ஆளுங்கட்சியினரின் அடாவடிகள் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

ஆளுட்கட்சியினரின் அத்து மீறல்களை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி, ஆட்சிக்கு அவப்பெயர் ஆகிவிடும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.உளவுத்துறை வாயிலாக முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் அமைதி நிலவுகிறதா; சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளதா; பிரச்னைகள் இருந்தால் அதற்கு காரணமானவர் யார் என்பது உள்ளிட்ட சுருக்கமான விவரங்கள். செயின் பறிப்பு மற்றும் கொலைகள் குறித்த விவரங்கள்; அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புள்ளி விவரங்களை, உடனே அனுப்பி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை அடுத்து, விவரங்களை அனுப்பி வைக்கும்படி, காவல் நிலைய ஆய்வாளர் வரை, உயர் அதிகாரிகள் உத்தரவுகளை அனுப்பி உள்ளனர். விவரங்களும் தொகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 Oct 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?
  7. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  8. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  9. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  10. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!