/* */

கண்மாய் நீர் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

முத்துப்பட்டி கண்மாய் நிரம்பி பாண்டியன் நகர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்

HIGHLIGHTS

கண்மாய்  நீர் நிரம்பி  குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
X

முத்துப்பட்டி கண்மாய் நிரம்பி பாண்டியன் நகர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

முத்துப்பட்டி கண்மாய் நிரம்பி பாண்டியன் நகர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதற்கிடையே நேற்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மதுரை மாநகர் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழை காரணமாக மாடக்குளம் பிரதான கண்மாய் நிரம்பி அதிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு முத்துப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், முத்துபட்டி கண்மாய் தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கண்மாயிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டபோது, வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது.இதன் காரணமாக வெள்ளநீர் மதுரை மாநகராட்சி வார்டு எண் 73 க்கு உட்பட்ட பாண்டியன் நகர் குடியிருப்பு பகுதிக்குள் கண்மாய் நீர் சூழ்ந்தது.

இதனால், பாண்டியன் நகர் குடியிருப்பு பகுதிக்குள் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் ,அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.மதுரை நகரில் பல இடங்களில் மழை பெய்தது. மதுரை ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்பநகர், அண்ணாநகர், மேலமடை, கோமதி புரம் பகுதிகளில், மழையால் சாலைகளில் நீர் தேக்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் பகுதிகளில் தாழைவீதி சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மதுரை மாநகராட்சி உதவி ஆணையர், சாலையை பார்வையிட்டு, சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


Updated On: 3 Dec 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?