Begin typing your search above and press return to search.
மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு
மதுரை அச்சம்பத்து பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் 18 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
HIGHLIGHTS

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியை சேர்ந்தவர் சதீஸ்வரன். இவர், பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 14ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் கதவு உடைந்த நிலையில் உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சதீஸ்வரன் புகார் செய்தார். மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.