/* */

மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர்

500 நகர்புற சுகாதார மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் செய்யப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார்

HIGHLIGHTS

மருத்துவர்,  செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர்
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன் (பைல் படம்)

மதுரை 500 நகர்புற சுகாதார மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் செய்யப்படுவர்பின்னர் வரும் ஜூன் முதல் வாரத்தில் முதல்வர் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து, விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பாலியல் புகார் சம்பந்தமான கேள்விக்கு. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மயக்கவியல் துறை துணை பேராசிரியர் மீது பாலியல் புகாரை தொடர்ந்து 8 மருத்துவர்கள் கொண்ட விசாக கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறு உறுதி செய்த பின்னர் மருத்துவமனை டீன் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இந்த நடவடிக்கை ஒரே துறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதனை அறிவுறுத்தக்கூடிய நடவடிக்கையாக இருக்கும் இது. மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அமையும்.மதுரையில் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு.தற்போது, செவிலியர்கள் பற்றாக்குறையை நிரப்புவதற்கு தான், 4308 பணியிடங்கள் நிரப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர் பணிக்காக, 1900 பேருக்கு 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.இந்தாண்டு 4200 பேருக்கு எம்.ஆர்.வி.எம் மூலம் பணி நிறுவனம் செய்ய உள்ளது.மதுரையில் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப் படாமல் உள்ளது இது குறித்த கேள்விக்கு. மொத்தம் 708 மருத்துவமனைகள் உள்ளது. இதில், 500 மருத்துவமனைகள் முழுமையாக பணிகள் முடிவு பெற்று உள்ளது.

இந்த மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ,உதவி சுகாதார ஆய்வாளர்கள்,உதவியாளர்கள் என்கின்ற வகையில் பணி நியமனங்கள் செய்து வருகின்றனர்.இந்த பணி நியமனங்கள் முடிவுற்ற உடனே, தமிழக முதல்வர் வருகிற ஜூன் முதல் வாரத்தில் 500 மருத்துவமனைகளை ஒரே நேரத்தில் திறந்து வைப்பார் என மா.சுப்பிரமணியன் கூறினார்.

Updated On: 25 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  3. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  4. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  5. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  6. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  8. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  9. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  10. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!