/* */

மதுரை மாவட்ட ஊராட்சிகளில் ஜனவரி 26-ம் தேதி கிராம சபைக் கூட்டம்

மதுரை மாவட்ட ஊராட்சிகளில் ஜனவரி 26-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மதுரை மாவட்ட ஊராட்சிகளில் ஜனவரி 26-ம் தேதி கிராம சபைக் கூட்டம்
X

குடியரசு தினமான 26.01.2023-ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில், உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதியன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. ஜனவரி 26-2023 (குடியரசு தினம்) அன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் , கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,தூய்மை பாரத இயக்கம் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேற்காணும் பொருள்கள் குறித்து நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Updated On: 24 Jan 2023 9:02 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...