/* */

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு திமுக சார்பில் இலவச தொழிற் பயிற்சி முகாம்

தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இலவச உணவு, தொழிற்பயிற்சி முகாம் நடத்திய திமுகவினருக்கு மக்கள் பாராட்டு

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு திமுக சார்பில்  இலவச தொழிற் பயிற்சி முகாம்
X

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கொரோனாதடுப்பூசி முகாமில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் பகுதியில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு திமுக சார்பில் இலவச தொழிற் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குள்பட்ட வலையங்குளம் பகுதியில் திமுக சார்பில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எம்.எஸ்.எம்.இ. என்கிற அமைப்பின் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்கள் அனைவருக்கும் சிறப்பு தொழிற் பயிற்சி முகாம் நடைபெற்றது. காலையில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் இந்த சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, இலவச உணவு மற்றும் தொழிற்பயிற்சி முகாம் நடத்திய திமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ. அமைப்பினரின் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த தடுப்பூசி முகாமில், 500-க்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Updated On: 20 Sep 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...