/* */

மதுரை அருகே கோழிக்கடையில் தீ விபத்து: கோழிகள் பலி

பெருங்குடி பகுதியில், பட்டாசு வெடித்ததில், கோழி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுரை அருகே கோழிக்கடையில் தீ விபத்து: கோழிகள்  பலி
X

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தினமும் பலர் இல்லங்களிலும் விளக்கு ஏற்றி வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால், மதுரையில் பலர் இல்லங்களில் மத்தாப்பு வைத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியில் உள்ள அன்னை தெரசா நகரில், சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மோகன் பாபு என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சிக்கடையில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. விபத்து குறித்து, மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி இறந்தன. கடை பூட்டி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை.

Updated On: 22 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...