/* */

மதுரையில் பக்தரிடம் தகராறு: தந்தை, மகன் கைது

மதுரையில் நடந்த பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

மதுரையில் பக்தரிடம் தகராறு: தந்தை, மகன் கைது
X

பைல் படம்

பக்தர்களிடம் தகராறு செய்ததைக் தட்டி கேட்ட நிர்வாகி மீது தாக்குதல் தந்தை, மகன் கைது

மதுரை கீழ சந்தைப்பேட்டை கொண்டிதோப்பு தொகுப்பு வடக்கு சந்துவை சேர்ந்தவர் உதயகுமார்(68.) இவர் மாயாண்டி பிள்ளை சந்துவில் உள்ள கோவில் ஒன்றின் விழா கமிட்டி உறுப்பினராக உள்ளார்.இங்கு நடந்துவரும் கோவில் திருவிழாவிற்கு குடிபோதையில் சென்றனர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ராஜ்குமார்(49 )அவருடைய மகன் சுதர்சன்(23.) இருவரும் அங்கிருந்த பக்தர்களிடம் தகறாறில் ஈடுபட்டனர். இதை உதயகுமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை ஆபாசமாக பேசி தாக்கினர். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சுரேஷ்குமார் அவருடைய மகன் சுதர்சன் இருவரையும் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவர் கைது

மதுரை ,கூடல் நகர் காவேரி தெருவை சேர்ந்தவர் ராஜதுரை மனைவி ராஜேஸ்வரி(39.) கோவை தொப்பம்பட்டியை சேர்ந்தவர் கிஷோர்(50.) ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரியை கிஷோர் குமார் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை மிரட்டிய கிஷோரை என்பவரை கைது செய்தனர்.

மதுரையில் மது பாட்டில்கள் கஞ்சாவுடன் முதியவர் உட்பட 3 பேர் கைது

மதுரை மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே முதியவர் ஒருவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு இன்ஸ்பெக்டர் திலகர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கீரைத்துறை ஜோசியர் முத்துப்பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்த முதியவர் சண்முகராஜ்(61 ) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பாட்டில்களை பறிமுதல் செய்தார் .

அரசரடியில் வாலிபர் கைது

அரசரடி மெயின் ரோட்டில் ஸ்கேன் சென்டர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அவர்ஙள் அங்கு கஞ்சா விற்பனை செய்த ஆணையூர் மல்லிகை நகர் நாராயணமூர்த்தி மகன் சாய்குமார்(25 )என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

குலமங்கலம் பிரதான சாலையில் வாலிபர் கைது

செல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ரீகன். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குலமங்கலம் ரோடு 50 அடி ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த செல்லூர் கல்யாணசுந்தரம் ஐந்தாவது தெருவை சேர்ந்த சந்தானம் மகன் பாலகிருஷ்ணன்(29 )என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 220 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.



Updated On: 1 April 2023 11:15 AM GMT

Related News