மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை துரிதப்படுத்தக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக்கோரி மதுரையில் தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கு மதுரை தொப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. த மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. தற்போது, வரை முழுமையான பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி வருவது தாமதமாகும் நிலையில், மத்திய அரசு தன் பங்கீடான ரூ.400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் தொடர் முழக்க போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், மற்றும் காங்கிரஸ், தி.மு.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, கூட்டணி கட்சியினர் கையில் செங்கல் ஒன்றை எடுத்துக்காட்டிய படி 'எய்ம்ஸ் எங்கே?' என்று முழக்கமிட்டனர்.

Updated On: 24 Jan 2023 11:06 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...