/* */

மதுரை விமான நிலையம் அருகே முன்னாள் முதல்வரை வரவேற்க அமைக்கப்பட்ட மேடையால் சர்ச்சை

மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினரின் செயல்பாடுகளால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்

HIGHLIGHTS

மதுரை விமான நிலையம் அருகே முன்னாள் முதல்வரை வரவேற்க அமைக்கப்பட்ட மேடையால் சர்ச்சை
X

மதுரை விமானநிலையத்தில்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளித்த அதிமுக நிர்வாகிகள்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அனுமதியின்றி அமைக்கப்பட்ட திடீர் மேடையால் சர்ச்சை ஏற்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினரின் செயல்பாடுகளால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து மதுரை வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ,உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தொண்டர்களுடன் திரளாக திரண்டு இருந்தனர் .

அப்போது விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அதிமுக சார்பில்,முன்னாள் எடப்பாடி பழனிசாமி வரவேற்க ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ,செல்லூர் ராஜு ஆகியோர் திடீர் மேடை அமைத்து தொண்டர்களுடன் எடப்பாடிக்கு வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவினர் விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை அமைக்கப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் வரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்க அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரடியாக நின்று வரவேற்று அனுப்பி விடுவது வழக்கம்.

ஆனால், முதல் முறையாக அதிமுகவினர் சர்ச்சைக்குரிய வகையில் திடீர் மேடை அமைத்து வரவேற்பளித்தனர். மேடை அமைப்பது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் நடைபெற்றது அனைரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இனி வரும் காலங்களில் இதைப் போல அரசியல் கட்சிகள் விமான நிலையத்தில் மேடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறப்படுகிறது. உச்ச கட்ட பாதுகாப்பு வளைத்தில் உள்ள விமான நிலையத்தில் அதிமுகவினரின் மேடையை வேடிக்கை பார்த்த விமான நிலைய அதிகாரிகள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து, காவல்துறையினரிடம் விசாரித்தபோது, விமான நிலைய அதிகாரிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறினர்.

Updated On: 29 Sep 2022 8:30 AM GMT

Related News