/* */

மதுரையில் ஜோதிலிங்க யாத்திரை நிறைவு

மதுரையில், யோகா விழிப்புணர்வு குறித்த 12 ஜோதி லிங்கம் சைக்கிள் யாத்திரை நிறைவு விழா நடந்தது.

HIGHLIGHTS

மதுரையில் ஜோதிலிங்க யாத்திரை நிறைவு
X

மதுரையில் ஜோதிலிங்க யாத்திரை நிறைவு விழாவில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.

யோகா குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த, புனேவை சேர்ந்த பூஜா என்ற மாணவி, சைக்கிளில் யாத்திரை மூலம் இந்தியாவில் உள்ள 12 ஜோதி லிங்கம் உள்ள ஸ்தலங்களில் மேற்கொண்டார்.

கடந்த அக்டோபர் 8ம் தேதி கேத்தர்நாத்தில் இருந்து புறப்பட்டு, நிறைவாக டிசம்பர் 31ம் தேதி ராமேஸ்வரம் வந்தடைந்தார். அதனை தொடர்ந்து மதுரையில் தனது சைக்கிள் யாத்திரை பயணத்தை நிறைவு செய்தபோது, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் பூஜாவை பாராட்டி, பொன்னாடை அணிவித்து,அவருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.அவருடைய பயிற்சியாளர் சமீரையும் பாராட்டியும் நினைவு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். எஸ்.சரவணன், கே.தமிழரசன், ரோட்டரி துணை ஆளுநர் ரவி பார்த்தசாரதி, அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

யோகா விழிப்புணர்வை குறித்து பூனேவை சேர்ந்த பூஜா என்பவர் 8,250 கிலோமீட்டர் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கம் ஸ்தலங்களான குஜராத் சோமநாதம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனம், உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர், மத்திய பிரதேசம் ஓங்காரேஸ்வரர், உத்தரகண்ட் கேதாரேஸ்வரர், மகாராஷ்டிரம் பீம சங்கரர், திரியம்பகேஸ்வரர், ஜார்கண்ட் வைத்தியநாதர், குஜராத் நாகேஸ்வரர், தமிழ்நாடு ராமேஸ்வரம், உத்தரபிரதேசம் காசி விஸ்வநாதர், மகாராஷ்டிரம் குஸ்மேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிற்கு சைக்கிள் யாத்திரையாக மேற்கொண்டு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அவருக்கும், அவரது பயிற்சியாளருக்கும் அதிமுக சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று மாணவர்கள், இளைஞர்கள் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும், என்று கூறினார்.

Updated On: 4 Jan 2023 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?