/* */

சதுரகிரி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 29 -ம் தேதி வரை வனத்துறை அனுமதி

பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலில் வரும் 29ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

சதுரகிரி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 29 -ம் தேதி வரை வனத்துறை அனுமதி
X

மதுரை சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவில் பாதை.

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சதுரகிரி வனப்பகுதியில் கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் "சதுரகிரி" என அழைக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோவிலின் சிறப்பு என்கின்றனர், பக்தர்கள்.

மலைக்கோவிலில் மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நாளை (ஜூன் 26) ஆனிமாத பிரதோஷம், 28ம் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி நாளை முதல் வரும் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினரும், கோவில் நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்