/* */

ஜெனகை மாரியம்மன் கோயிலில், குடிநீர் தொட்டி, மிஷின் உடைப்பு: பக்தர்கள் வேதனை

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி மற்றும் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பக்தர்கள் வேதனை

HIGHLIGHTS

ஜெனகை மாரியம்மன் கோயிலில், குடிநீர் தொட்டி, மிஷின் உடைப்பு: பக்தர்கள் வேதனை
X

ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி மற்றும் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவிழா. மற்றும் முக்கிய விழா காலங்களில் குடிநீர் தட்டுப்பாடினை கருத்தில் கொண்டு சோழவந்தானை சேர்ந்த பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் மணிமுத்தையா என்பவர் தனது சொந்த செலவில் 2000 லிட்டர் கொள்கலன் உள்ள சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மெஷின் வசதி ஏற்படுத்தி அங்குள்ள கிணற்றை சுத்தப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட பிளான்ட் வாட்டர் வசதியினை ஏற்படுத்தி கொடுத்திருந்தார்

இந்நிலையில் அதனை மர்ம நபர்கள் இடித்து டேங்க் மற்றும் மெஷினை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா கூறியதாவது

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆன்மீக சேவையில் ஈடுபட்டுள்ளேன். பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேக பணிகளுக்கு ஏராளமான நன்கொடை வழங்கியுள்ளேன். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் கிணற்றை சுத்தப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கேட்ட தன்.அடிப்படையில் செய்து கொடுத்தேன். இதனை இன்று அதிகாலை இடித்து தள்ளியுள்ளனர். மேலும் குடிநீர் வாட்டர் பிளாண்ட். மோட்டாரையும் சேதப்படுத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது.

கோவில் குடிநீர் தொட்டி மற்றும் மோட்டார்களை இடித்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுத்து இடித்த இடத்தில் மீண்டும் குடிநீர் தொட்டி செயல்பட அனுமதிக்க வேண்டும். என்று கூறினார்

ஜெனகை மாரியம்மன் கோவில் சீர்பாதம் முருகேசன் கூறுகையில், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல கோவில்களுக்கு மணிமுத்தையா நன்கொடை வழங்கி ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு உள்ளார். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பக்தர்கள் குளிக்கும் கிணறு ஆழப்படுத்தி உடைமாற்றும் இடம் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் சாமி ஊர்வலம் செல்லும் வண்டி வசதி செய்துள்ளார். வருடம் தோரும்.நடைபெறும் 18 நாள் திருவிழாவுக்காக நன்கொடை அளித்து வருகிறார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர் கட்டிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிஷின் வசதியினை இடித்து தள்ளியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆன்மீக பக்தர்களை கூட்டி மிகப் பெரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.

பக்தர்களின் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்ட தொட்டி மிஷினை இடித்ததால் பக்தர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 4 Jan 2023 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?