/* */

சோழவந்தான் அருகே கஞ்சா விற்ற இருவர் சுற்றிவளைப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே கஞ்சா விற்ற இருவர் சுற்றிவளைப்பு
X

மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகம்.

சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி, தனிப்படையினர் மேலக்கால் பகுதிகளில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த வினோத்குமார், முத்துராஜ் ஆகிய இருவரும் பொது இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, விசாரித்ததில் அவர்களிடம் கஞ்சா இருப்பதும், விற்பனஒய் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இருவரிடமும் இருந்த 1,350 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், சமீபகாலமாக சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், இப்பகுதியில், அதிக அளவில்.சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் குத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி ,சோழவந்தான் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் இளைஞர்களை நல்வழிப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 10 Jun 2022 8:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?