/* */

தேனூரில் வைகை ஆற்றில் இறங்கிய அழகர்

The Sundararaja Perumal who landed in the Vaigai river in Thenur

HIGHLIGHTS

தேனூரில் வைகை ஆற்றில்  இறங்கிய  அழகர்
X

தேனூர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்

தேனூர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார் திரளான பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வழிபாடு செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவையொட்டி, கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. திருமஞ்சனமாகி தர்மகர்த்தா மண்டபத்தில், எழுந்தருளல் நிகழ்ச்சி, அணிகலன்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை சுமார் 10 மணி அளவில் மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் சுவாமியை வரவேற்றனர். தொடர்ந்து ,ஐந்து முக சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை புதன்கிழமை மண்டுக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் பலர் செய்திருந்தனர். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 14 Jun 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்