/* */

மேலக்கால் அருகே நீர் நிலையில் குப்பைகள் கொட்டுவதால் மாசுபடும் அபாயம்

ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

HIGHLIGHTS

மேலக்கால் அருகே நீர் நிலையில் குப்பைகள் கொட்டுவதால் மாசுபடும் அபாயம்
X

பைல் படம்

சோழவந்தான் மேலக்காலில் நீர்நிலை பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில், கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 9 வார்டுகள் உள்ளது. இதில், மேலக்கால் கிராமத்தில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன .

இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் மற்றும் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் சேகரித்து, அதை ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் கொட்டப்பட வேண்டும். வைகை ஆற்று பகுதிகளிலும் மயான கரையோர பகுதிகளிலும் மற்றும் மேலக்கால் அருகில் உள்ள கண்மாயில் நீர் நிலை பகுதிகளிலும் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், நீர் நிலைகளில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆகையால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேலக்கால் ஊராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பார்வையிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதேபோல், சோழவந்தான் வட்டப்பிள்ளையார் கோயில் அருகே வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோருகின்றனர்.

Updated On: 4 April 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்