/* */

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

சோழவந்தான் அருகே பலத்த மழையால், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்
X

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம். 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கால்வாய் வசதி இல்லாததாலும், ஊராட்சி நிர்வாகத்தினர் பணிகளை செய்யாததாலும், மிகவும் சிரமப்படுவதாகவும், மழை நீர் புகுந்ததால் பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகையால், சம்பந்தப்பட்ட காடுபட்டி ஊராட்சி நிர்வாகம், உடனடியாக மழைநீரை வெளியேற்றி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், கால்வாய் வெட்டும் பணிக்காக தோண்டிய மூடாமல் இருப்பதால், தண்ணீர் வெளியேற வசதி இல்லாததாலும், மழை பெய்தவுடன் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடுவதாக கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 1 Dec 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  4. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  5. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  7. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்