பாலமேடு அய்யனார் கோயிலில் பொங்கல் விழா

உலக மக்களின் நன்மை வேண்டி யும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாலமேடு அய்யனார் கோயிலில்  பொங்கல் விழா
X

பாலமேடு அருகே அய்யனார் கோவிலில்  நடந்ச பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி, சல்லிக் கோடாங்கிபட்டியில் ஸ்ரீ பூந்தலை கொண்ட அய்யனார் திருக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் முதல் நாள் உலக மக்களின் நன்மை வேண்டியும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து 101- படையல் இட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகத் துடன் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வலையபட்டி,சல்லிக் கோடாங்கிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

அய்யனார் வழிபாடு... கிராமங்களில் ஊருக்கு வெளியே காடுகளிலும் கண்மாய் கரைகளை அடுத்தும் கோவில்கள் அமைத்து அய்யனார் கிராமத்தைக் காப்பவராகவும் விளைச்சலைப் பெருக்குபவராகவும் கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் திகழ்கின்றன.

கிராமத் தேவதை வழிபாடு விரைந்து பயனளிக்கும் என்ற நம்பிக்கை கிராமத்து மக்களிடம் மிகுந்து காணப்படுவதால் கருப்பர், வீரபத்திரர், காளியம்மன், மாரியம்மன் முதலியவைகளைக் காவல் தெய்வமாய் கருதி உத்திராயண காலத்தில் சிவராதரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் பச்சை வாழை இலையைப் பரப்பி பொங்கல், பயறு வகைகள் வைத்துப் படைத்து தங்களுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் நன்கு நடைபெற வேண்டுமென்றும், தங்களுடைய கால்நடைச் செல்வங்களான மாடு, ஆடு, சேவல் முதலியவைகளை நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டுமென்றும் தங்களுக்குச் சொந்தமாயுள்ள கால்நடைகளைத் தானமாய் நேர்த்திக்கடன் என்று ஒன்றை விட்டுச் செல்கின்றனர். இவைகளை கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொள்கின்றது.

பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யானர் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.அவர்கள் இவரை பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள் யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றார்கள். அய்யனார் வழிபாட்டில் கருப்பர் மிகவும் முக்கியமானவராகும். இவர் பக்தர்களான சாமியடிகள் மீது இறங்கி வந்து அருள் பாலிப்பார்.

கிராமத்து விதிகளில் சாமியடிகள் மூலம் வலம் வந்து அங்குள்ள பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூன்யம், காலரா, அம்மை, பிளாக நோய்களைத் தரும் தீயசக்திகளை விரட்டி விடுகின்றார் என்று கருதுகிறார்கள் எனவே இவ்வழிபாட்டு நாட்களில் சாமியாட்டம்: சிறப்பாய் நடத்தப்படுகின்றது தமிழகத்தில் உள்ள அய்யனார் வழிபாட்டிற்கும், மலையாளத்தில் உள்ள அய்யப்பன் வழிபாட்டிற்கும் அநேக ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

அய்யப்பன் கோயிலிலும் பதினெட்டு படிகளாகும். அழகர்மலை கோயிலிலும் பதினெட்டுப்படி களாகும். தமிழகத்தில் அய்யானருக்கு பூரணை, புஷ்கலா என்ற மனைவியர் உண்டு. கேரளாவில் ஆரியங்காவிலும் பூரணை புஷ்கலையுடன் ஐயப்பன் இருக்கிறார். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப் பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.

Updated On: 19 Sep 2023 10:30 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  ஜம்மு காஷ்மீரின் கலகோட் பகுதியில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு...
 2. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. திருவள்ளூர்
  கர்நாடக அரசை கண்டித்து ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு...
 4. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 5. திருவள்ளூர்
  சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து நாயுடு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!
 6. நாமக்கல்
  ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரம் நடும்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா..!
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நகரை தூய்மைப்படுத்த பேட்டரி வாகனங்கள்
 9. திருவண்ணாமலை
  காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
 10. வந்தவாசி
  திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம்