/* */

மதுரை அருகே அரசு மதுபானக் கடை திறக்கக் கோரி ஊராட்சித் தலைவர் மனு

தற்போது, மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது

HIGHLIGHTS

மதுரை அருகே அரசு மதுபானக்  கடை திறக்கக் கோரி ஊராட்சித் தலைவர் மனு
X

சேது சீனிவாசன் ஊராட்சி மன்றத் தலைவர், கல்லனை.

அலங்காநல்லூர் அருகே அரசு மதுபான கடை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் மனு கொடுத்துள்ளார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கல்லணை ஊராட்சியில், அரசு மதுபான கடை திறக்க வேண்டும் என, ஊராட்சி மன்றத் தலைவர், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: மதுரை அருகேஅலங்காநல்லூர் பாலமேடு குமாரம், பாசிங்காபுரம், கொண்டையம்பட்டி, ஆகிய பகுதிகளில் 7 க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன.

அந்த கடைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக மூடப்பட்டன. தற்போது, மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும்,அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு சுற்றி 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இல்லாததால் இவர்கள் மது வாங்க வேண்டும் என்றால் 15 அல்லது 20 கிலோமீட்டர் வரை சென்று தான் வாங்கி வர வேண்டும்ஆகவே இப்பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க வேண்டும்.

வெளியிடங்களில் இருந்து மது பாட்டிலை வாங்கி வரும்போது போலீசார் சோதனைக்கு உட்படுத்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அத்துடன் எங்களது ஊராட்சியில் அரசு மதுபான கடை இல்லாததால், மது பிரியர்கள் வேறு பாதைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆகவே, கல்லணை ஊராட்சியில், பள்ளி மற்றும் மருத்துவமனை சம்பந்தப்படாமல் ஒதுக்கு புறமாக ஒரு இடத்தில் அரசு மதுபான கடை திறக்க வேண்டுமென, கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 29 Aug 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  5. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  9. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  10. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்