/* */

சோழவந்தான் அருகே தேனூரில், வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்த கள்ளழகர்

மதுரை மாவட்டம் தேனூரில் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே தேனூரில், வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்த கள்ளழகர்
X

மதுரை அருகே தேனூரில் வைகை ஆற்றில்  இறங்கிய கள்ளழகர்.

மதுரை மாவட்டம். சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) கோவில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.

அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சர்க்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

தொடர்ந்து பூஜைகள் நடந்தது வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார். பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திருவிளக்கு பூஜை மற்றும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது

நாளை மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.இதைத் தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இரண்டு நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் குடும்பத்தார் சார்பாக அன்னதானம் மற்றும் புத்தாடை வழங்கப்படுகிறது.

இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார். இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

நாளை மறுநாள் அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவிபூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடைபெறம் பின்னர்,சுவாமி திருக்கோயில் வந்து சேரும். மூன்று நாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியன் பாண்டியன் கூறியதாவது. பண்டைய புராணங்களில் ஒன்றான மண்டுக புராணத்தில் அழகர் கருணை மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. அதில் மண்டுக மகரிஷிக்கு சுந்தரராஜர் என்ற பெயரில் திருமால் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுக்கும் லீலை சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தேனூர் கிராமத்தில் தான் பல்லாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது.

இதனால் தேனூர் சுந்தரராஜ பூமி என்று இன்றும் பேசப்படுகிறது. இப்பெரும் விழாவில் அழகர்கோவிலில் இருந்து ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடாகி தேனூர் வைகையாற்றில் எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு மோட்சம் தரும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது.

திருமலை மன்னர் தேனூருக்கு விஜயம் செய்து இந்தத் திருவிழாவைக் கண்டு மகிழ்ந்து, தலைநகர் மதுரையில் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாண திருவிழாவுடன் இணைந்து நடத்துவதற்கு வசதியாக மதுரைக்கு இத்திருவிழா மாற்றப்பட்டது.

மேற்படி திருவிழாவானது சுமார் 365 ஆண்டுக்குப் பின் 2008 ஆம் ஆண்டு முதல் வைகாசிப் பௌர்ணமியன்று எங்கள் பெரும் முயற்சியாலும் கிராம பொது மக்களின் ஒத்துழைப்போடு தேனூரில் அதிக விமர்சையாகநடைபெற்று வருகிறது. இந்தாண்டு மேற்படி திருவிழா 15ம் ஆண்டு திருவிழாவாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது என்று கூறினார்.

Updated On: 4 Jun 2023 7:04 AM GMT

Related News